என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லதா ரஜினிகாந்த்"
மதுராந்தகம் அருகே உள்ள பவுஞ்சூரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது மனைவி காளியம்மாள். நரிக்குறவர்கள். இவர்களது மகள் 2-வது மகள் ஹரினி கடந்த செப்டம்பர் 15-ந் தேதி கடப்பாக்கத்தில் நடந்த கோவில் தெருவில் வெங்கடேசன் குடும்பத்துடன் அங்கு கடை வைத்திருந்தார். பின்னர் அவர் குடும்பத்துடன் பவுஞ்சூர் கடை வீதியில் தூங்கினார்.
மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது சிறுமி ஹரினியை காணவில்லை. மர்ம நபர்கள் அவளை கடத்தி சென்றிருப்பது தெரிந்தது. இதுகுறித்து அணைக்கட்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.
இதற்கிடையே கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா, குழந்தையை பறிகொடுத்த நரிக்குறவர் தம்பதியை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர் போலீசாரிடம் கூறும்போது, கடத்தப்பட்ட சிறுமியை போல் ஒருவரை மும்பையில் உள்ள ரெயில் நிலையத்தில் கண்டதாக தெரிவித்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பரண்டு சந்தோஷ் ஹதிமானி உத்தரவுப்படி தனிப்படை போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அவர்கள் மும்பை சென்று விசாரித்தனர்.
இந்த நிலையில் உத்திரமேரூர் பகுதியில் கடத்தப்பட்ட சிறுமி ஹரினி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் அவளை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் ஆனந்த கண்ணீரோடு சிறுமி ஹரினியை கட்டி அணைத்தனர். சிறுமி கடத்தலில் தொடர்புடையவர்களிடம் போலீசார் விசாரணை நடந்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னையில் நேற்று நடந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் குழந்தைகள் கடத்தலின் பின்னணியில் மாபியா கும்பல் செயல்படுவதாக குற்றம்சாட்டி இருந்தார்.
ரோட்டில் பிச்சை எடுக்கும் குழந்தைகளை அழைத்து விசாரித்தாலே போதும், பின்னணியில் இருப்பவர்களை பிடித்து விடலாம் என்பது போன்று ரஜினியின் கருத்து அமைந்துள்ளது.
எப்போதுமே ஒரு விஷயத்தை பற்றி யார் குரல் எழுப்புகிறார்களோ அவர்களின் செல்வாக்கை பொறுத்தே அந்த விஷயமும் ஆழமாக அலசப்படும்.
அந்த வகையில் குழந்தை கடத்தல் தொடர்பாகவும், அதன் பின்னணி குறித்தும் ரஜினி குரல் கொடுத்த பின்னர் அது விவாதப் பொருளாகி இருக்கிறது. தமிழகம் முழுவதுமே காணாமல் போன பல குழந்தைகள் கண்டுபிடிக்கப்படாமலேயே உள்ளன.
இந்த நிலையில் சென்னையில் கடத்தப்பட்ட தங்களது 2 பெண் குழந்தைகளும் தங்களுக்கு மீண்டும் கிடைப்பார்களா? என்கிற ஏக்கத்துடன் 2 பெற்றோர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.
சென்னை சாலிகிராமம் மஜித்நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவில் வசித்து வருபவர் கணேஷ். இவரது மகள் கவிதா. கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் 19-ந்தேதி சிறுமி கவிதா வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போனாள். அப்போது சிறுமிக்கு 2 வயதே ஆகி இருந்தது.
மகளை காணாததால் கணேசும், அவரது குடும்பத்தினரும் பல இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை. இதுபற்றி போலீசில் புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
சிறுமி கவிதா காணாமல் போனது தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் முதலில் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வழக்கு விசாரணை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தந்தை கணேஷ் தனது மகளை மீட்டு தரக்கோரி நடையாய் நடந்தார். மத்திய குற்றப்பிரிவு போலீசில் அதிகாரிகள் மாறிக் கொண்டே இருந்தனர். ஆனால் வழக்கு விசாரணை மட்டும் அப்படியே இருந்தது. எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
ஒருபக்கம் போலீசை நம்பி கொண்டே... இன்னொரு பக்கம் சாமியையும் நாடினர். போகாத கோவில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு கோவில் கோவிலாக சென்றனர். எங்கு சென்று பார்த்தாலும் குழந்தை கண்டிப்பாக கிடைப்பாள் என்றே இப்போதும் கூறு கிறார்கள். இதனால் 7 ஆண்டுகளாக ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள் சிறுமி கவிதாவின் பெற்றோர்.
சென்னை வால்டாக்ஸ் ரோட்டில் வசித்து வரும் பெருமாள்-லட்சுமி தம்பதியினரின் ஒரு வயது பெண் குழந்தை சரண்யா. கடந்த 2016-ம் ஆண்டு கடத்தப்பட்டது.
நடைபாதையே வாழ்க்கையாகி போனதால் குழந்தையை அரைஞான் கயிற்றோடு தனது உடலில் கட்டியபடியே தாய் லட்சுமி தூங்கினார். அப்போது காரில் வந்த ஒரு ஆணும், 2 பெண்களும் கயிற்றை கத்தியால் வெட்டி எறிந்து விட்டு குழந்தையை காரில் கடத்திச் சென்று விட்டனர்.
இதுதொடர்பான வீடியோ காட்சிகளும் கைப்பற்றப்பட்டன. அதனை வைத்து பூக்கடை போலீசார் விசாரணை நடத்தினர். இருப்பினும் எந்த துப்பும் துலங்கவில்லை. இதனால் கடந்த 2½ ஆண்டாக பெருமாளும், லட்சுமியும் தவியாய் தவித்து வருகிறார்கள். காணாமல் போன இந்த 2 குழந்தைகளும் எங்கு இருக்கின்றன என்பது மர்மமாகவே உள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்ற போது காணாமல் போன குழந்தைகளை கண்டுபிடித்து கொடுக்க கோர்ட்டு உத்தர விட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த பெற்றோர்களை போன்று கண்ணுக்கு தெரியாமல் எத்தனையோ பெற்றோர் தங்களது குழந்தைகளை தொலைத்து விட்டு காத்திருக்கிறார்கள். எனவே கடத்தப்பட்ட குழந்தைகளை கண்டுபிடிக்க போலீசார் வேகம் காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. #Childkidnapping
நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா குழந்தைகள் பாதுகாப்பிற்காக ‘தயா பவுண்டேசன்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இதன் சார்பில் திருவான்மியூரில் குழந்தைகளுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் குழந்தை கடத்தல் தொடர்பாக மத்திய - மாநில அரசுகள் சரியாக செயல்படவில்லை என்றும் போலீசார் இந்த விஷயத்தை கண்டுகொள்ளாமலேயே இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டினார்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரஜினி பேசிய பேச்சு வருமாறு:-
குழந்தைகளின் நிம்மதியை பெரியவர்கள்தான் கெடுக்கிறார்கள். வீட்டில் தொடங்கி, பள்ளிக்கூடம், சமுதாயம் வரையில் குழந்தைகளின் நிம்மதியை கெடுத்துக் கொண்டே உள்ளனர்.
அழகான பூக்களாக திகழும் குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் குழந்தைகளுக்காக தீட்டப்படும் திட்டங்கள் சரியாக உள்ளன. இதற்காக பணம் செலவழிக்கிறார்கள்.
ஆனால் நமது மத்திய - மாநில அரசுகளுக்கு குழந்தைகள் மீது அக்கறை இல்லை. குழந்தைகளை எந்த அரசாங்கமும் சரியாக கவனிக்கவில்லை. அப்படி கவனிக்காத நாடு எப்படி நல்ல நாடாக இருக்கும்.
குழந்தைகள் நலனுக்காக எனது மனைவி இந்த அறக்கட்டளையை தொடங்கி உள்ளார். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்த டாடா, ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களும் இதனை கையில் எடுத்துள்ளன.
அரசாங்கத்தை நம்பி பிரயோஜனம் இல்லாத காரணத்தால்தான் பெரிய முதலாளிகள் குழந்தைகள் நலன் காக்கும் திட்டங்களை கையில் எடுத்துள்ளனர்.
இதற்காக லதா செய்திருக்கும் காரியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகாது. ரஜினியின் மனைவி லதா என்று சொல்லி கொண்டிருக்கும் காலம் போய், இனி லதாவின் கணவர் ரஜினி என்று சொல்லும் காலம் வரவேண்டும். உண்மையிலேயே இது மிகப்பெரிய சேவையாகும்.
‘குழந்தைகளுக்கு அமைதி’ என்ற அமைப்பை தொடங்க வேண்டும் என்பது லதாவின் நீண்ட கால கனவாக இருந்தது. அது இன்று நனவாகி உள்ளது.
சாலைகளில் பிச்சையெடுக்கும் பிள்ளைகளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று உன்னை பிச்சை எடுக்க வைப்பது யார்? என்று விசாரணை நடத்துவதற்கு எவ்வளவு நேரம் ஆகும். இதனை போலீசார் கண்டு கொள்வதே இல்லை.
குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைப்பதன் பின்னணியில் மிகப்பெரிய மாபியா கும்பலே உள்ளது. அரசாங்கமும், போலீசும் இவர்களை கவனிப்பதே இல்லை. சமூகம் கூட அவர்களை பார்த்துக்கொண்டு அப்படியே சென்று விடுகிறது.
குழந்தைகளை கடத்திச்சென்று அவர்களின் முகவரியை அழித்து தாய் - தந்தை இல்லாத அநாதைகளாக ஆக்கி விடுகிறார்கள். இதுபோன்ற குழந்தைகள் பிச்சைக்காரர்களாக, கிரிமினல்களாக, நோயாளிகளாக மாறி வாழ்க்கை முழுவதும் செத்து கொண்டே இருக்கிறார்கள்.
இது எவ்வளவு பெரிய குற்றம். கொலை குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கொடுக்கிறார்களோ? அதே தண்டனையை குழந்தைகளை கடத்தும் மாபியாக்களுக்கு வழங்க வேண்டும்.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.
கேள்வி:- கல்வியாளராகிய நீங்கள் ‘தயா பவுண்டேஷன் என்ற அமைப்பை தொடங்கி, சமூக சேவை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் எப்போது உங்களுக்கு தோன்றியது?
பதில்:- நிறைய தர்மங்கள், சேவைகள் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய அப்பா, அம்மாவிடம் இருந்து நான் கற்றுக்கொண்டேன். சிறு வயதிலேயே சமூக சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் எனக்கு தோன்றியது. அதன் வெளிப்பாடு தான் ‘தயா பவுண்டேஷன்’ உருவாக காரணம்.
இந்திய பண்பாட்டுடன் ஒட்டிய வாழ்க்கையில், சமூக சேவை என்பது ஒரு அங்கம். தற்போது அன்றாட வாழ்வில் ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைக்கும் நேரத்தில் சமூக சேவை ஆற்ற வேண்டும் என்று எங்களுடைய பள்ளி (தி ஆஷ்ரம் குருப் ஆப் இன்ஸ்டிட்டியூஷன்) குழந்தைகளுக்கு சொல்லி வளர்க்கிறோம்.
கேள்வி:- ‘தயா’ அமைப்பு மூலம் எத்தனை குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது?
பதில்:- இத்தனை குழந்தைகளுக்கு உதவியிருக்கிறோம் என்று நாங்கள் கணக்கு வைத்துக் கொள்ளவில்லை. எல்லா ஊர்களில் இருக்கும் குழந்தைகளுக்கும் தயாவோடு தொடர்பு இருக்கிறது. பல குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வந்து எங்களுடன் இணைத்து மேடையில் ஏற்றியிருக்கிறோம். இப்படி 40 ஆண்டுகளாக பல தரப்பட்ட குழந்தைகளை நான் பார்த்து இருக்கிறேன். நான் பார்த்த குழந்தைகள், கல்யாணம் ஆன பிறகு கூட என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கி செல்கிறார்கள்.
கேள்வி:- ‘தயா’ அமைப்பில் உங்களுக்கு பக்கபலமாக இருப்பவர்கள் யார்?
பதில்:- எங்களுக்கு பக்கபலமாக ‘டாடா’ அறக்கட்டளை இருக்கிறது. பலவிதமான தேவைகள் மேலும் தேவைப்படுகிறது. தயா அமைப்பின் முயற்சிகள் என்பது, அனைவரும் ஒன்றாக சேரவேண்டும். இந்த ஒருங்கிணைப்பு இருந்தாலே நம்முடைய சமுதாயத்தை நாமே பாதுகாக்க முடியும்.
இதற்காக எல்லா ஊர்களிலும் தயா அமைப்பின் மையங்களை உருவாக்க போகிறோம். தற்போது சென்னையை தவிர புனே, மும்பையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.
பதில்:- இதுவரைக்கும் சாருடைய (ரஜினிகாந்த்), என்னுடைய சொந்த முயற்சியில் நடந்தது தான் தயா அமைப்பின் பணிகள். தற்போது ஒரு லட்சம் பேருக்கு செய்வது, இன்னும் 10 லட்சம் பேருக்கு போய் சேர வேண்டும் என்று நினைக்கிறோம். எனவே இதற்கு பல பேருடைய துணை தேவைப்படுகிறது.
ஏனென்றால் குழந்தைகளுக்கான தேவை தற்போது அதிகமாக இருக்கிறது. நாம் செய்கிற உதவிகள் பல பேருக்கு போய் சேர வேண்டும். எனவே யாரெல்லாம் தயா பவுண்டேஷனில் சேர விரும்புகிறார்களோ? மனதார நன்கொடை அளிக்க முன்வருகிறார்களோ? அவர்களுக்கு தயா அன்னதானம், தயா பூஜன், தயா கல்வி நிறுவனம் என்று தனித்தனி திட்டங்கள் இருக்கிறது.
கேள்வி:- ‘தயா’ அமைப்பு சார்பில் 24-ந்தேதி நடைபெறும் நிகழ்ச்சி எப்படி இருக்கும்?
பதில்:- தற்போதைய சூழலில் குழந்தைகள் ஒரு எந்திர வாழ்க்கையையே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஐ-பாட், செல்போன்கள், டி.வி.க்கள் என்று வேறுமாதிரியான சூழலில் தான் பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பழைய இந்தியா எப்படி இருந்தது? என்பது தெரியவில்லை. உலகம் புரிகிறது, அதில் இந்தியா குறைவான அளவே தெரிகிறது. எனவே இந்தியாவை பற்றி நன்றாக பிள்ளைகள் புரிந்துகொள்ளவேண்டும். நமது வழிமுறைகள், பாரம்பரியம், கலாசாரம், கலை போன்றவற்றை கட்டாயம் தெரிந்துகொள்ளவேண்டும். அதனால் தான் இதுபோன்ற விழாக்களை நடத்துகிறோம்.
முக்கியமாக ‘ஒன்றாக சேருதல்’ என்ற பழக்கம் வரவேண்டும். ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசும்போது தான் மனநிலை நன்றாக இருக்கும். தனியாக இருக்கும்போது தான் மனநிலையில் பிரச்சினை ஏற்படுகிறது. தனியாக ஒதுங்குதல், தனியாகவே இருத்தல், பேசாமல் இருத்தல், சிரிக்காமல் இருத்தல், ஆடாமல்-பாடாமல் இருத்தல் போன்றவை தான் மன அழுத்தம் வர காரணமாக அமைகிறது. அந்த மன அழுத்தம் வரக்கூடாது என்பதற்காகவே இதுபோன்ற திருவிழாக்களை நாங்கள் நடத்துகிறோம்.
திருவான்மியூர் கன்வென்ஷன் சென்டரில் சமீபத்தில் 3 நாட்கள் திருவிழா நடத்தினோம். அந்த விழாவில் எங்கள் நோக்கத்தை விதைத்துவிட்டோம். தற்போது 24-ந்தேதி அதே இடத்தில் மீண்டும் நடக்கும் புதிய திருவிழாவில் 1,500 குழந்தைகள் மேடையில் சிறந்த கலைஞர்களுடன் தங்கள் திறமையை வெளிக்கொணர உள்ளனர்.
‘எங்கள் உலகத்தின் முன்னோடிகளாக நாங்கள் உருவாகிறோம்’, என்று குழந்தைகள் தங்களுக்காக உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். முதலில் குழந்தைகள் குழந்தைகளுக்காக உறுதிமொழி எடுக்கிறார்கள். பின்னர் பெரியவர்களும், குழந்தைகளும் சேர்ந்து உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதனைத்தொடர்ந்து குழந்தைகளுக்காக நாங்கள் என்று பெரியவர்கள் உறுதிமொழி எடுக்கிறார்கள்.
எல்லா இடங்களிலும் குழந்தைகள் குறித்த முதன்மையான எண்ணம் உருவாக வேண்டும். அதுதான் முக்கியம். இந்த திருவிழாவில் குழந்தைகள் தான் சிறப்பு விருந்தினர்கள். இது ஒரு பொது காரியம். இதில் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். மேலும் விளையாட்டு, சினிமா, கார்ப்பரேட் நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என பல தரப்பிலும் இருந்து பிரபலங்கள் வருகிறார்கள்.
மாலை 5 மணி முதல் 8 மணி வரை விழா நடைபெறுகிறது. தயா பவுண்டேஷன் உள்பட அரசு-தனியார் பள்ளி குழந்தைகள், சாலையோர குழந்தைகள் என எல்லா தரப்பிலான குழந்தைகளும் பங்கேற்க இருக்கிறார்கள். சிறு வயதிலேயே பிரபலங்களாக உயர்ந்தவர்களும் பங்கேற்கிறார்கள். அவர்களது தனித்தன்மையை மேடையில் நாங்கள் எடுத்து கூற இருக்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் 10 குழந்தைகள் எங்கள் முக்கியமானவர்கள் பட்டியலில் (ஹால் ஆப் பேம்) இடம்பெறுவார்கள்.
இசை, நாட்டியம் என திருவிழா நிறைந்திருக்கும். இசையமைப்பாளர் அனிருத், டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் போன்றவர்களின் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. இந்த திருவிழாவில் எதுவுமே போட்டியாக இருக்காது. குழந்தைகள் முழுக்க முழுக்க அனுபவித்து மகிழும் தளமாக இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்த திருவிழா நடக்கும்.
கேள்வி:- சமீப காலமாக குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுப்பதற்கு தயா அமைப்பு சார்பில் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமா?
பதில்:- நீண்ட வருடங்களாக குழந்தைகளுக்கு என்று எந்த சிறந்த காரியங்களும் சமுதாயத்தில் நடைபெறவில்லை. பல தலைமுறைகளாக ஏதோ ஒரு விஷயத்தில் குழந்தைகள் தவித்துதான் வருகின்றனர். குப்பையில் கிடந்து உருண்டு தவழ்ந்தாலும், பங்களாவில் செழிப்பாக வளர்ந்தாலும் குழந்தையின் தேவை ஒன்று தான். பிறந்தது முதல் வளர்வது வரை அவர்களின் தேவை அன்பும், பாசமும், அரவணைப்பும் தான். அதோடு பாதுகாப்பும் மிக அவசியம்.
அன்றைய சமுதாயத்தில் மக்கள் மிகவும் மனோபலம் கொண்டவர்களாக, உணர்வுரீதியாக உயர்ந்தவர்களாக இருந்தனர். பக்குவமான பெரியவர்களாக இருந்தனர். அந்த சூழ்நிலையில் எதையும் நமக்கு சொல்லித்தர தேவையில்லை. தானாகவே தெரிந்துகொண்டோம். இன்றைக்கு நாம் எதையும் சத்தம்போட்டு சொல்ல வேண்டியதிருக்கிறது. சமுதாயத்தில் பண்புகள், கலாசாரங்கள், ஒருங்கிணைந்து செயல்படுவது, ஒற்றுமை இதெல்லாமே குறைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் தான் குழந்தைகள் வளருகிறார்கள். அப்படி வளரும்போது அவர்களது சூழ்நிலைகள் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்களேன்...
குழந்தைகள் உலகத்தில் வன்கொடுமை, சுரண்டல், தவறான பார்வை, கடத்தல் உள்பட பல பிரச்சினைகள் அதிகமாகவே இருக்கிறது. இதில் சிக்கும் குழந்தைகளின் வாழ்க்கை என்னாகும் என்பதே பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. இதற்கான தீர்வுகள் என்னென்ன? என்பது 24-ந்தேதி திருவிழாவில் சொல்கிறோம். விழாவின் கடைசிபாகத்தில் அந்த முக்கிய தகவல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார். #DhayaFoundation #LathaRajinikanth
கடந்த 3-ந்தேதி வழக்கு விசாரணைக்கு வந்த போது வருகிற 10-ந்தேதிக்குள் லதா ரஜினிகாந்த் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் விசாரணையை தொடர்ந்து எதிர்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதை மறுத்துள்ள லதா ரஜினிகாந்த் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
எங்கள் தரப்பு வக்கீல் அறிவுறுத்தல் ஏதுமின்றி அவரது தரப்பு வக்கீல் தனது வாதத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
மேலும் ஆணையில் குறிப்பிடப்பட்ட அளவிற்கு அவருடைய பொறுப்புகள் இல்லை. எனவே ஏப்ரல் 16 ம் தேதியிட்ட நீதிமன்ற ஆணை செயல்படுத்த முடியாததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான பிரச்சனைக்குள் செல்லாமல் மனுக்களின் தகுதி மீதான விசாரணையை நடத்துவதுதான் பொருத்தமாக இருக்கும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இறுதி விசாரணைக்காக வரும் 10-ந்தேதிக்கு வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். #Kochadaiiyaan #LathaRajinikanth
தயாரிப்புப் பணிக்காக பெங்களூருவை சேர்ந்த ஆட் பீரோ என்னும் விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின் மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது.
இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாகவும் அதில் ‘கோச்சடையான்’ திரைப்பட உரிமையை வழங்க மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ஆட் பீரோ நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிகிறது.
ஆனால் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததோடு வேறு நிறுவனத்திற்கு பட வெளியீடு உரிமை வழங்கப்பட்டது. இதையடுத்து ஆட் பீரோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
கடந்த பிப்ரவரி மாதம் லதா ரஜினிகாந்துக்கு தொகையை திருப்பி தர 3 மாதங்கள் கெடு வழங்கப்பட்டது. இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 16-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய தொகையை லதா ரஜினிகாந்தோ அல்லது மீடியா ஒன் நிறுவனமோ ஜூலை 3-ந்தேதிக்குள் வழங்க வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
அந்த அவகாசம் இன்றுடன் முடிந்ததால் இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது லதா ரஜினிகாந்துக்கு நிலுவைத் தொகையை எப்போது தருவீர்கள்? என்று கேள்வி எழுப்பியதோடு வரும் 10-ந் தேதி வரை கெடு விதித்து இருக்கிறது. 10-ந்தேதிக்குள் தெரிவிக்கவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. #LathaRajinikanth #Kochadaiyaan
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்